×

நீடித்த நிலையான வளர்ச்சியே ஒன்றிய அரசின் கொள்கை… கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற ஜி20 எரிசக்தித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர்; பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் நாடாகும்.

நாம் மின் திறன் இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளோம். 2030-ஆம் ஆண்டுக்குள் 50% திறனை அடைய திட்டமிட்டுள்ளோம். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலகளவில் இந்தியாவும் உள்ளது. 2015-ம் ஆண்டில், எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைத் தொடங்கினோம். இது உலகின் மிகப்பெரிய எல்இடி விநியோகத் திட்டமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் 45 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான எரிசக்தியைச் சேமிக்கிறது.

மேலும், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம். நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டுபோய் சேர்த்துள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே ஒன்றிய அரசின் கொள்கை. என்று பிரதமர் மோடி கூறினார்.

The post நீடித்த நிலையான வளர்ச்சியே ஒன்றிய அரசின் கொள்கை… கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,PM Modi ,Delhi ,Narendra Modi ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...