×

கொலை வழக்கில் 12 ஆண்டு சிறையில் இருந்தவர் குற்றம் நடந்தபோது சிறுவன் என்பதால் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் குற்றம் நடந்தபோது சிறுவனாக இருந்தது நிருபிக்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 2009ம் ஆண்டு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுடன் சேர்த்து விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தண்டனை பெற்ற நபர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதில் கொலை குற்றம் நடந்தபோது தனது வயது குறித்து சரிபார்க்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும்படி மனுதாரர் கோரியிருந்தார். இதனை தொடர்ந்து அரசு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மே மாதம் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் காவாய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வில் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை படித்ததாகவும், அவரது பிறந்த தேதி 1989ம் ஆண்டு மே 2 என்றும் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

எனவே குற்றம் நடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியின்படி அவருக்கு 16 வயது 7 மாதங்கள். குற்றம் நடந்தபோது மனுதாரர் சிறார். அவர் தற்போது 12 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துள்ளார். எனவே அவரை விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post கொலை வழக்கில் 12 ஆண்டு சிறையில் இருந்தவர் குற்றம் நடந்தபோது சிறுவன் என்பதால் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து...