சென்னை: புயல் மழை பேரிடர் பாதிப்பகளை களைய பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சியினருடன் இன்னும் பல தோழர்கள் தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் CYcloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கி உதவிகள் செய்து கொண்டிருக்கும் கட்சியினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
The post நிவாரண பணிகளுக்கு தோள் கொடுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.