×

சன்ரைசர்ஸ் அணியில் முல்டர்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இங்கிலாந்து வீரர் பிரய்டண் கேர்ஸ் (29) விளையாட இருந்தார். இவர், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடிய போது குதிக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் தொடரில் இருந்து விலகினார். கூடவே இம்மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அவருக்கு பதில் தென் ஆப்ரிக்கா ஆல் ரவுண்டர் வியான் முல்டர் (27) சேர்க்கப்பட்டுள்ளார். பிரய்டனை ஒரு கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கி இருந்தது. அதே நேரத்தில் அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய்க்கு பதிவு செய்திருந்த வியானை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் வியான் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 ஆட்டங்களில் ஆடி 6 விக்கெட்களை வியான் கைப்பற்றி உள்ளார்.

The post சன்ரைசர்ஸ் அணியில் முல்டர் appeared first on Dinakaran.

Tags : Mulder ,Sunrisers ,England ,Brydon Cares ,Sunrisers Hyderabad ,IPL ,Dinakaran ,
× RELATED வேலூர் ஆதி நிச்சயம் ஜொலிப்பார்; வில் யங் நம்பிக்கை