×

சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது

பெங்களூரு : சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் ஆதித்யா எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ஆதித்யா எல்1 விண்கலம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான எல்1 புள்ளியை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் அதன் சுற்றுவட்டப்பாதையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் ஆதித்யா எல்1 விண்கலம் பூமியையும், நிலவையும் ஒரு சேர புகைப்படம் எடுத்துள்ளது.

ONLOOKER என கூறப்படும் இப்புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பூமியை பார்ப்பது போல் இருக்கும் 3 கருவிகளில் ஒன்றாக இருக்கும் கருவி மூலமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படத்தை இஸ்ரோ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எல்1 புள்ளியை நோக்கி நகரக்கூடிய பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளையும், கட்டளைகளையும் பெங்களுருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்1 புள்ளியை ஆய்வு செய்வதற்கு முன்பாக விண்கலம் செல்லும் பயணம் 126 நாட்கள் எடுத்துக்கொள்ளும், விண்கலம் செல்லக்கூடிய வழிகள், கேமராவில் பதியும் காட்சிகள் ஆகியவை தரவுகளாக பதிவு செய்து அவற்றை ஆய்வுகளுக்காக எடுத்துக்கொள்கின்றனர். ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 புள்ளியை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கான கட்டளைகள் தொடர்ந்து வழக்கப்பட்டுள்ளது.

The post சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது appeared first on Dinakaran.

Tags : Sun ,Earth ,Bengaluru ,Dinakaran ,
× RELATED சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?