×

கோடை விடுமுறைக்கு பின் உயர் நீதிமன்றம் நாளை திறப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1ம் தேதி முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை காலத்தில் 4 வாரமும் விடுமுறை கால நீதிமன்றங்கள் இயங்கியது. இரண்டு நாட்கள் மனுக்கள் தாக்கல், இரண்டு நாட்கள் விசாரணை என்ற அடிப்படையில் இரு நீதிபதிகள் அமர்வு உள்பட 3 நீதிபதிகள் அவசர வழக்குகளை விசாரித்தனர்.

விடுமுறை கால நீதிமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கோடை விடுமுறை மே 31ம் தேதி முதல் முடிவடைந்த நிலையில் நாளை முதல் வழக்கமான பணிகள் தொடங்குகிறது. கோடை விடுமுறை காலத்தில் உயர் நீதிமன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று உயர் நீதிமன்ற கட்டிடம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

The post கோடை விடுமுறைக்கு பின் உயர் நீதிமன்றம் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை