×

சம்மரிலும் வீட்டை கூலா வச்சுக்கலாம் வாங்க!

நன்றி குங்குமம் தோழி

கத்திரி ஆரம்பிக்கும் முன்பே தமிழகம் முழுதும் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டான். வேலைக்கு செல்பவர்கள் அங்கு ஏ.சி வசதி இருப்பதால், உச்சி வெயிலின் தாக்கத்தினை சமாளித்து விடுவார்கள். வீட்டில் இருப்பவர்கள் அதை சமாளிப்பது மிகவும் கடினம். அதற்காக 24 மணி நேரமும் ஏ.சி அறையில் இருக்க முடியுமா என்ன? கரன்ட் பில் ஒரு பக்கம் எகிற ஆரம்பிக்கும். கோடை காலம் ஆரம்பித்தால் அடுத்து மழைக்காலம் வரை வீட்டில் வெப்பம் தாங்க முடியாது. இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதன் விளைவுதான் இந்த பருவ மாற்றம். வெயில் காலத்தில் நம்மால் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது. வீட்டையும் நம்மையும் ஏ.சி பயன்படுத்தாமல் கூலாக்க சில வழிமுறைகள்.

* சீலிங் ஃபேனுக்கு பதிலாக டேபிள் ஃபேன் பயன்படுத்தலாம். இது ஜன்னலில் இருந்து இயற்கை காற்றை உள்ளே இழுத்து அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும். டேபிள் ஃபேனின் பின்புறத்தில் ஒரு வாளி நிறைய நீரை வைத்தால் இன்னும் குளிர்ந்த காற்று நமக்கு கிடைக்கும்.

*வீட்டின் ஒவ்வொரு ஜன்னல் மற்றும் அறையின் கதவிலும் கடினமான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து திரையாகத் தொங்க விடலாம். இது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் கூலாக வைத்திருக்க உதவும்.

* கொசுவலை பயன்படுத்தியிருக்கும் ஜன்னல்களில் தண்ணீரில் நனைத்த கனமான காட்டன் துணிகளுக்குப் பதிலாக மெல்லிய துணி அல்லது லேசான டிரான்ஸ்ஃபரன்ட் காட்டன் துணிகளை ஸ்கிரீனாகப் பயன்படுத்தலாம்.

* அறையினுள் பெரிய டப் போன்ற அகலமான வாளியில் நீரை நிரப்பி அந்த அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் அறையானது நன்றாக குளிர்ச்சியாகும்.

* சூரிய வெளிச்சம் வரும் ஜன்னல், கதவில் கடினமான காட்டன் துணியை திரையாகத் தொங்க விடலாம். இது சூரிய ஒளியின் மூலம் வெப்பம் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கும்.

* துளசி, புதினா, கற்றாழை, திருநீற்றுப்பச்சிலை என்று காற்றை சுத்தப்படுத்தும் இன்டோர் செடிகளை வளர்க்கலாம். இவற்றுக்கு குறைந்தளவு சூரிய ஒளியே போதுமானது.

* எக்ஸாஸ்ட் ஃபேன் வெளிப்புறத்தில் இருந்து வரக்கூடிய வெப்பத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரும். அதே வேளையில் வீட்டினுள் இருக்கும் வெப்பத்தையும் வெளியேற்றி விடும். இதனை வீட்டின் மேல் துவாரத்தில் பொருத்தி விட்டால் வெப்பக்காற்று வெளியேறி வீடே குளிர்ச்சியாக இருக்கும்.
– ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்.

The post சம்மரிலும் வீட்டை கூலா வச்சுக்கலாம் வாங்க! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...