×

கோடை வெயில் ஜார்க்கண்டில் பள்ளி திறப்பு ஜூன் 14 வரை ஒத்திவைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாள்தோறும் 38 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அடுத்த 5 நாட்களுக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது நாளை மறுதினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அம்மாநில பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை செயலர் ரவிக்குமார் வெளியிட்ட உத்தரவில் , ‘’கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகள் ஜூன் 12 முதல் 14 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

The post கோடை வெயில் ஜார்க்கண்டில் பள்ளி திறப்பு ஜூன் 14 வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Ranchi ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதால்...