×
Saravana Stores

சூடானில் இருந்து 1 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு பயணம்.. கொளுத்தும் வெயிலில் பசி, பட்டினியுடன் உயிரை கையில் பிடித்து நடக்கும் சோகம்!!

சூடான் ; உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து 1 லட்சம் ஏழை மக்கள் பசி, பட்டினியுடன் போராடியபடி அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக புகுந்துள்ளனர்.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட அதிகாரப்போட்டி உள்நாட்டு போராக வெடித்துள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சத்தம் கேட்கும் சூடானில் இருந்து ஒரு லட்சம் ஏழை மக்கள் எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்ததாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

100 டிகிரி அளவுக்கு கொளுத்தும் வெயிலில் வசதியுள்ளோர் வாகனங்கள் மற்றும் குதிரைகள் மூலமும் வசதி அற்றவர்கள் கழுதைகள் மூலமும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பசி, பட்டினியோடு போராடியபடி உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏதும் அறியாத குழந்தைகள், முதியவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை தாங்கியபடி கானகங்கள் வழியாக போகும் அவலநிலை காண்போரின் இதயங்களை பிசைவதாக உள்ளது. மறுபுறத்தில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

The post சூடானில் இருந்து 1 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு பயணம்.. கொளுத்தும் வெயிலில் பசி, பட்டினியுடன் உயிரை கையில் பிடித்து நடக்கும் சோகம்!! appeared first on Dinakaran.

Tags : Sudan ,war ,
× RELATED மீனம்