×

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் குறித்து ஒன்றிய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த 6-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக இருந்த நிலையில் தற்போது 131.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் மதகு பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்தது. பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.

The post முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar dam ,Idukki ,Mullai ,Periyar ,Dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...