×

பலத்த காற்று எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

 

அறந்தாங்கி,நவ.15: பலத்த காற்று வீசும் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க போக வேண்டாம். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீன் பிடி துறைமுகங்களான கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்களை பகுதிகள் வெறிச்சோடின. படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post பலத்த காற்று எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pudukkottai district ,Department of Fisheries ,
× RELATED அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது