×

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 820 பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 820 பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஆய்வு செய்த பின் அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டியளித்தார். வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் 39 பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே இயங்கவில்லை. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே சென்று சிலிண்டர் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

The post புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 820 பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,A. Chakrapani ,Dinakaran ,
× RELATED ஒரேமுறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து...