×

மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநில சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில் 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்திலிருந்து (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சட்டத்துறை அரசு செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி, உறுப்பினர்கள் கோபி ரவிக்குமார், முகமது ஜியாபுதீன், வில்ஸ்டோ டாஸ்பின், முரளி அரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : State Legal Official Language Commission ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,M. K. Stalin ,Tamil Nadu State Legal Official Language Commission ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அரசின் நலத்திட்டங்கள் குறித்து...