×

ஸ்பெஷல் வடை

தேவை:

உருட்டு தோல் உளுத்தம் பருப்பு – 1/2 கிலோ
மிளகு – 3 மேஜைக்கரண்டி
கல் உப்பு – ஒரு கைப்பிடி
அரிசி மாவு – 50 கிராம்
பூண்டு – 100 கிராம்
வரமிளகாய் – 5
பெருங்காயத்தூள் – சிறிது
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

பக்குவம்:

முதல்தரமான உளுந்தை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து தோலை முழுவதும் நீக்காமல் பாதி உளுத்தம் பருப்பு தோலுடன் இருப்பது போல் கொரகொரப்பாக அரைக்கவேண்டும். அதாவது உளுந்தானது அரைத்தும் அரையாமலும் இருக்க வேண்டும். பின்னர் மிளகை சிறிய உரலில் இடித்து அதில் சேர்க்க வேண்டும். மிக்ஸியிலோ அம்மியிலோ மிளகை அரைக்கவும் நசுக்கவும் கூடாது. அதேபோல பூண்டையும் வரமிளகாயையும் இடித்துதான் சேர்க்கவேண்டும். வடைக்கு இதுதான் சுவையே. கல் உப்பையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாகக் கலந்து பாத்திரத்தில் வைக்கவும். அதில் அரிசிமாவைச் சேர்த்துக் கிளறி வாழை இலையில் எண்ணெய் தடவி, மெல்லிய வடையாகத் தட்டை போல தட்டி கடாயில் பொரித்தெடுக்க வேண்டும். வடையை எவ்வளவுக்கு மெலிதாகத் தட்டுகிறோமோ அந்தளவுக்கு சுவையாக இருக்கும். ஒரு வாரம் கூட வைத்துச் சாப்பிடலாம்

The post ஸ்பெஷல் வடை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்