×

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து: அமைச்சரவையில் தீர்மானம்


பாட்னா: பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தப்படும்’ என்றார். இதற்கிடையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசு கூறியது.

எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை முதல்வர் நிதிஷ்குமார், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி மாநிலத்தில் 94 லட்சம் ஏழை குடும்பங்கள் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், ஒன்றிய அரசு உதவினால் இந்த பணிகளை செய்து முடிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து: அமைச்சரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Patna, Bihar ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ