×

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை

டெல்லி: அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்த வினய்குமார் சக்சேனா தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி.கே.சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராடுவோம் என தீர்ப்பு குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; எங்கள் பணிகளை தொடர்ந்து செய்வோம் எனவும் கூறினார்.

The post சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Medha Patkar ,Delhi ,Medha Bhatkar ,Delhi court ,Vinay Kumar Saxena ,VK Saxena ,
× RELATED அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5...