×

கேதார்நாத் அருகே பனி சரிவு

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் நேற்று மிகப்பெரிய பனி சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர் சேதமும் இல்லை.  சார்தாம் என்பது இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள இந்துக்களின் நான்கு புனித தலங்களை குறிக்கிறது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை கடந்த மே மாதம் 10ம் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேதார்நாத் கோயில் அருகே நேற்று மிகப்பெரிய பனி சரிவு ஏற்பட்டது. கேதார்நாத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் சோராபாரி என்ற பனிப்பாறைகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு சரிந்து அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பனிப்பாறைகள் சரிந்து விழுவதை அங்கிருந்த சில பக்தர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வௌியிட்டுள்ளனர்.

The post கேதார்நாத் அருகே பனி சரிவு appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Rudraprayag ,Uttarakhand ,Chardham ,India ,Gangotri ,Yamunotri ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் ஆற்றில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி