×

எழில்மிகு நகரம் போட்டி: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நகரங்களின் பொது இடங்களுக்கான எழில்மிகு நகரம் போட்டியை ஒன்றிய அரசு நடத்துகிறது. ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொது இடங்கள் உள்பட அழகான, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் வட்டங்களை ஊக்கப்படுத்தி அங்கீகரிப்பது இப்போட்டியின் நோக்கமாகும்.

நகரங்களின் மிகவும் எழில்மிகு வட்டங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை இப்போட்டியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும். நீர்நிலைகள், பசுமைப் பகுதிகள், சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்கள், சந்தை, வர்த்தகப்பகுதிகள் ஆகிய 4 பிரிவுகளின் கீழ், நகரங்களில் உள்ள மிகவும் சிறந்த எழில்மிகு பொது இடங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த நகரங்கள் தேசிய விருதுக்கு பரிசீலிக்கப்படும். இதில் பங்கேற்க ஜூலை 15 ம் தேதி கடைசி நாள்.

The post எழில்மிகு நகரம் போட்டி: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Smart City Competition ,Union Govt ,NEW DELHI ,Union Government ,Smartest City competition ,Union Housing ,Urban… ,Smart City Contest ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...