×

அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 12 – 14 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி : ஒன்றிய அரசு

டெல்லி : இந்தியாவில் அழிந்து விட்ட உயிரினமான சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தென்ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகளும், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும் இந்தியா கொண்டு வரப்பட்டன. இவை மத்தியபிரதேசம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தன. இதில் ‘சாஷா’ என்ற பெண் சிவிங்கி புலி கடந்த மார்ச் மாதமும், ‘உதய்’ என்ற 2 ஆண் சிவிங்கி புலிகள் ஏப்ரல் மாதமும், ‘தக்க்ஷா’ என்று பெயரிடப்பட்ட பெண் சிவிங்கி புலி மே மாதமும் ‘தேஜாஸ்’ ‘சூரஜ்’ என்ற ஆண் சிவிங்கி புலிகள் ஜூலை மாதமும் உயிரிழந்தன.

இதேபோல், ‘ஜுவாலா’ என்ற பெண் புலி ஈன்ற நான்கு குட்டிகளில் 3 உயிரிழந்தன. இதனை அடுத்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிவிங்கி புலிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 12 – 14 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

The post அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 12 – 14 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Civinki Tigers ,India ,Government of the Union ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!