×

சில்லி பாயின்ட்…

* யுஏஇ அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. யுஏஇ 50 ஓவரில் 227/8 (அரவிந்த் 49, ரமீஸ் 38, ஆசிப் 27, அயன் அப்சல் 58*). ஓமன் 46 ஓவரில் 228/5 (இலியாஸ் 53, ஷோயிப் கான் 52*, முகமது நதீம் 50*, அயான் கான் 41).

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (887) முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். நம்பர் 1 அந்தஸ்தை இழந்த ஆஸி. வீரர் லபுஷேன் (877) 3வது இடத்துக்கு பின்தங்கினார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (883) 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ரிஷப் பன்ட் (758) 10வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் ஆர்.அஷ்வின் (860) முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் (829) 2வது இடத்தில் நீடிக்கிறார்.

* அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடர், டெக்சாஸ் மாகாணம் டாலஸ் நகரில் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. இதில் எம்ஐ நியூ யார்க் (கேப்டன்: போலார்டு), டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (கேப்டன்: டு பிளெஸ்ஸி), சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் (கேப்டன்: ஆரோன் பிஞ்ச்), வாஷிங்டன் ஃபிரீடம் (கேப்டன்: மோய்சஸ் ஹென்ரிக்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஆர்கஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. கடைசி 2 அணிகளுக்கு இன்னும் கேப்டன்கள் நியமிக்கப்படவில்லை.

* டிஎன்பிஎல் டி20 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நேற்று வீழ்த்தியது. டிராகன்ஸ் 20 ஓவரில் 170/9 (ராகுல் 20, ஷிவம் சிங் 21, கணேஷ் 44, சரத் குமார் 25, சுபோத் 31). சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 169/9 (கேப்டன் ஜெகதீசன் 37, அபராஜித் 74, ராமலிங்கம் 12).

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Oman ,B division league ,UAE ,Dinakaran ,
× RELATED 3.1 ஓவரில் மேட்டர் ஓவர் ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து சாதனை வெற்றி