×

சில்லிபாயிண்ட்…

* பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவி இழந்தவர் பாஜ எம்பி பிரிஜ் புஷன் சரண் சிங். அதனால் நடைபெற இருந்த தேர்தலில் அவர்கள் ஆட்கள்தான் அதிகம் போட்டியிட்டனர். அதனால் நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியது. இந்நிலையில் உலக மல்யுத்த ஒன்றியம் நேற்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடை நீக்கம் செய்தது. அதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் கல்யான் சவுபே உறுதி செய்துள்ளார். அதனால் விரைவில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இந்தியாவின் பெயர், மூவர்ண கொடி ஆகியவற்றை பயன்படுத்த முடியாது. நடுநிலை ஆட்டக்காரர்களாகதான் பங்கேற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

* தமிழ் நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தனுஷ், கிஷோர், பூஜா சுவேதா, கவுரி மிஸ்ரா, சாய் பிரஜன் மற்றும் விளையாட்டு அமைப்புகளுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30.50லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.

*அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. தொடர்ந்து 3வது முறையாக சொந்த மண்ணில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா. மொத்தம் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் 2ஆட்டங்களை பும்ரா தலைமையிலான இந்தியா வென்றிருந்தது. எஞ்சிய ஒரு ஆட்டம் நேற்று முன்தினம் இரவு மழை காரணமாக கைவிடப்பட்டது.

* ஹங்கேரியில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று காலை 35கிமீ தொலைவு நடையோட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற இந்திய வீரர் ராம்பாபு 27வது இடத்தை தான் பிடித்தார். அவர் பந்தய தொலைவை 2மணி, 39நிமிடங்கள், 7விநாடிகளில் கடந்தார். ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கமகன் நீரஜ் சோப்ரா டி.பி.மானு ஜெனா கிஷோர் ஆகியோர் இன்று களம் இறங்குகின்றனர்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காய்கள் பறிக்கும் நேரத்தில்...