×

சில்லி பாயின்ட்…

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அமோல் மஜும்தார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று உற்சாகமாக பீச் வாலிபால் விளையாடி பயிற்சி மேற்கொண்டனர். முதல் டெஸ்ட் டொமினிகா, விண்ட்சர் பார்க் மைதானத்தில் ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது.

* பெங்களூரு எப்சி கால்பந்து அணியுடனான ஒப்பந்தத்தை நட்சத்திர வீரர் சுனில் செட்ரி மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளார்.

* கனடா ஓபன் உலக டூர் 500 பேட்மின்டன் தொடர் கல்காரியில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷியா சென் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

* ஆஸ்திரேலிய அணியுடன் 3வது டெஸ்டில் மோதவுள்ள இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் மொத்தம் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஓல்லி போப் அணியில் நீடிக்கிறார். இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக், ராபின்சன், மொயீன் அலி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஆண்டர்சன், பேர்ஸ்டோ, பிராடு, டக்கெட், டான் லாரன்ஸ், ஓல்லி போப், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Amol Majumdar ,women's cricket team ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?