×

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் ஓய்வு

மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2018-ல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 3 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார். விராட் கோஹ்லி தலைமையிலான (2008) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சித்தார்த் கவுல் இருந்தார்.

அந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என பதிவிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களிலும், லெஜண்ட்ஸ் லீக் போன்ற தொடர்களிலும் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

The post இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Siddharth Kaul ,Mumbai ,T20 ,India ,Ireland ,Dinakaran ,
× RELATED இந்தியாவுடன் 2வது மகளிர் டி20 வெஸ்ட்...