×

‘எனக்காக அழகான காலணிகளை அனுப்பியுள்ளீர்கள்’.. காலணி தைத்து அனுப்பிய தொழிலாளிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அழகிய காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26ம் தேதி சுல்தான்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார். அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக மறுநாள் வழங்கி உள்ளார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் இனி கைகளில் செருப்புகளை தைக்க தேவை இல்லை என்று கூறினார். மேலும் அவரிடம் உரையாடிய ராகுல் காந்தி, செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது கைகளால் தைத்த காலணிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் தரப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ராம்சேட் என்ற ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார். ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள் என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி ராம்சேட்டுக்கு நன்றி கூறி உற்சாகமாக உரையாடினார்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி;

உழைக்கும் குடும்பங்களின் ‘பாரம்பரிய திறன்களில்’ இந்தியாவின் மிகப்பெரிய செல்வம் உள்ளது.

சமீபத்தில், சுல்தான்பூரில் இருந்து திரும்பும் போது, ​​ஷூ கைவினைஞர் ராம்செட் ஜியை சந்தித்தேன், அவர் தனது சொந்த கைகளால் செய்யப்பட்ட மிகவும் வசதியான மற்றும் சிறந்த ஷூவை எனக்கு அன்புடன் அனுப்பினார்.

நாட்டின் மூலை முடுக்கிலும் பல்வேறு திறமைகளைக் கொண்ட கோடிக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர். இந்த ‘பில்டர்ஸ் ஆஃப் இந்தியா’ அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்றால், அவர்கள் தங்கள் சொந்த விதியை மட்டுமல்ல, நாட்டின் விதியையும் மாற்ற முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ‘எனக்காக அழகான காலணிகளை அனுப்பியுள்ளீர்கள்’.. காலணி தைத்து அனுப்பிய தொழிலாளிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,M.P. ,Ramset ,2018 Kannada assembly election campaign ,Amit Shah ,
× RELATED மக்களவை தேர்தல் வெளிப்படையாக நடக்கவில்லை : ராகுல் காந்தி