×

ஷிண்டே அரசு கவிழாது: அஜித் பவார் கருத்து

மும்பை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியை சேர்ந்த தலைவர்கள், மகாராஷ்டிரா துணை சபாநாயகரிடம் 79 பக்க கடிதத்தை அளித்தனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூறுகையில், ‘16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கவிழாது. அவர்களின் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. சட்டசபையில் ஷிண்டே அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழக்காது’ என்றார்.

The post ஷிண்டே அரசு கவிழாது: அஜித் பவார் கருத்து appeared first on Dinakaran.

Tags : Shinde government ,Ajit Pawar ,Mumbai ,Supreme Court ,Maharashtra ,Chief Minister ,Eknath Shinde ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வி எதிரொலி...