×

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

சென்னை: காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இறையன்பு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், காவிரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது என புகார் எழுந்துள்ளது. பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

The post காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : kaviri ,karnataka ,chief secretary ,bhavyanbu ,Chennai ,Vaviyanbu ,Karnataka government ,Caviri river ,Chief Secretary of ,Karnataka Govt. ,
× RELATED காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழ்நாடு...