×

வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை : வங்கி, எண்ணெய் நிறுவன பங்குகள் மதிப்பு சரிவு.. முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு

மும்பை : பங்குச் சந்தை இன்று வீழ்ச்சியுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இதே போல தேசிய பங்குச் சந்தை எண் நிப்டி 300 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகமானது. வங்கி, தொலைத்தொடர்பு, எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் இன்று இரக்கத்தை கண்டன. குறிப்பாக ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திர அன்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவை கண்டன.

கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்த நிலையில், சிறு திருத்தம் ஏற்படும் வகையில் இன்று இறக்கம் கண்டு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு மத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளது. சென்செக்ஸ் தற்போது 1,024 புள்ளிகள் சரிந்து 84,547 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 296 புள்ளிகள் குறைந்து 25,882 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் சரிவால் முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை : வங்கி, எண்ணெய் நிறுவன பங்குகள் மதிப்பு சரிவு.. முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Nippty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,247 புள்ளிகள் உயர்வு..!!