×

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீச்சல் குளத்தில் செங்கமலம் யானை உற்சாக குளியல்

மன்னார்குடி: கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீச்சல் குளத்தில் பாப் கட்டிங் செங்கமலம் யானை உற்சாகமாக குளிக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல ஊர்களில் கடும் வெ யில் வாட்டி வருகிறது. காலையில் துவங்கும் வெயில் மாலை வரை சுட்டெ ரிப்பதோடு இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து சமய அறநிலையத்துறை கட் டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக் கோயில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த வைணவ கோயில்களில் ஒன் றாக திகழ்கிறது. இக்கோயிலில், செங்கமலம் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 34 வயதுடைய இந்த யானையின் பாப் கட்டிங் உலக புகழ் பெற்றது ஆகும்.

கோயிலில் நடை பெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோ பால் வழிகாட்டுதலில் வலம் வந்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்து வரு கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் பாப் கட்டிங் செங்கமலம் யானை குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் ஏற்கன வே 75 ஆயிரம் ரூபாய் செலவில் ஷவர் வசதி செய்து கொடுத் துள்ளது. இந்நிலையில், செங்கமலம் யானைக்கு கோயில் வளாகத்தில் நீச்சல்குளம் ஒன்று கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற மதிப்பீட்டு குழுத்தலைவர், மா நில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ தொடர்ந்து எடுத்த முய ற்சி காரணமாக கோயில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத் தில் 500 சதுரடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நகரங் களில் வெயில் சதமடித்து வருகிறது. இயல் பான வெப்பத்தை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். அதன்படி, தற்போது வெயிலின் தாக்கம் உக்கிரமாக தான் இருக்கும் சுழ லில் சிறிய உடல் கொண்ட உயிரினங்களே தவித்து வரும் நிலையில் பெரிய உடல் கொண்ட உயிரினமான யானைகளின் தவிப்பு யானைகளுக்கு மட்டுமே தெரியும். இந்த சுழலில், கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தனக்கு கட்டப்பட்ட ஷவரில் காலையிலும், மாலையில் நீச்சல் குளத்திலும் பாப் கட்டிங் செங்க மலம் யானை மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கிறது. இதனை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் உற்சாகமாக கண்டு களிக்கின்றனர்.

The post கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீச்சல் குளத்தில் செங்கமலம் யானை உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : Sengamalam ,MANNARGUDI ,Dinakaran ,
× RELATED வடுவூர் அருகே தனியார் நிதி நிறுவன பெண்...