×

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 100 கன அடி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam lake ,Kanchipuram Collector ,Chengalpattu ,Chembarambakkam lake ,Chembarambakkam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...