×

நிலக்கோட்டை கோழிக்கொண்டை பூக்களுக்கு கேரளாவில் செம மவுசு: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. கேரளாவிற்கு நல்ல விலைக்கு அனுப்பப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள செங்கோட்டை, ஒட்டுப்பட்டி, கரியாம்பட்டி, மிளகாய்பட்டி, குண்டலப்பட்டி, அணைப்பட்டி, நரியூத்து, பாலம்பட்டி, மைக்கேல்பாளையம், காமலாபுரம், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவரி மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் குறுகிய கால பயிரான வாடாமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, கனகாம்பரம் ஆகிய பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

பருவமழை, கோடைமழை சரியான நேரத்தில் பெய்ததால், இந்தாண்டு இப்பகுதியில் விவசாயிகள் கூடுதல் பரப்பில் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடவுசெய்த கோழிகொண்டை பூச்செடிகள் தற்போது பூத்துக் குலுங்க துவங்கியுள்ளன. இப்பூக்களை விவசாயிகள் தினமும் பறித்து நிலக்கோட்டை பூ சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநில வியாபாரிகள் பூக்களை அதிக விலைக்கு வாங்கி வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நிலக்கோட்டை கோழிக்கொண்டை பூக்களுக்கு கேரளாவில் செம மவுசு: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kerala ,
× RELATED கேரள கூட்டுறவு வங்கி ஊழல்;...