×
Saravana Stores

முதல்வர் குறித்து அவதூறு மதுரை நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ ஆஜர்

மதுரை: அதிமுக சார்பில் கடந்த 29.5.2023ல் முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக அரசு குறித்தும், சட்டம் – ஒழுங்கு குறித்தும் முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அ.பழனிச்சாமி, மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நீதிபதி முன் ஆஜரானார். செல்லூர் ராஜூ, தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராவதாக அபிடவிட் தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் ெகாண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post முதல்வர் குறித்து அவதூறு மதுரை நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Madurai ,Chief Minister ,Madurai District Court ,Chief Criminal ,Tamil Nadu government ,Munichala ,AIADMK ,
× RELATED சொல்லிட்டாங்க…