×

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, திருச்சி நீதிமன்றத்தில் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

The post சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Seeman ,Madurai ,Varunkumar ,Trichy Saraka ,DIG ,Naam Tamilar Katchi ,Trichy 4th Criminal Court ,Court ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்