×

சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சவுதி அரேபிய மருத்துவமனையில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) கலையரசி வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.comல் கண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED ஹஜ் புனித யாத்திரையில் 90 இந்தியர்கள் உட்பட 900 யாத்ரீகர்கள் பலி