×
Saravana Stores

சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஜாமீன்மனு 5வது முறையாக தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரி 5ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.

The post சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஜாமீன்மனு 5வது முறையாக தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Trader Jayaraj ,Bennix ,Sathankulam police ,Tuticorin district ,Chatankulam ,Inspector ,Sridhar ,Madurai Jail ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!