×

சமோசா மாயமானது பற்றி விசாரணையா? இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் விளக்கம்

புதுடெல்லி: இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு முதல்வரின் வருகையையொட்டி, அவருக்கு வழங்குவதற்காக, பிரபல நட்சத்திர ஓட்டலில் இருந்து சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன.

முதல்வருக்கு கொடுக்க வேண்டிய உணவு பொருளை தவறுதலாக முதல்வரின் பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான பாஜ மாநில அரசை விமர்சித்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் நேற்று கூறுகையில், ‘‘ஊடகங்கள் சித்தரிப்பது போல் சமோசாக்கள் மாயமானதற்காக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அதிகாரிகளின் தவறான நடத்தை கண்டறிவதற்கு தான் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாஜ என் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குழந்தைத்தனமானது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து என் மீதும் அரசு மீதும் அவதூறு பிரசாரம் செய்து வருகிறது’’ என்றார்.

The post சமோசா மாயமானது பற்றி விசாரணையா? இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Himachal ,Chief Minister ,Sukhwinder Singh ,New Delhi ,Himachal Pradesh ,Sukhwinder Singh Sukku ,CIT ,
× RELATED சிம்லா, மணாலி, காஷ்மீரில் பனிப்பொழிவு;...