×

குங்குமப்பூ சாகுபடியில் அசத்தும் கொடைக்கானல் விவசாயி; ரூ.4 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி..!!

திண்டுக்கல்: மலை பயிர்களுக்கு பெயர்போன கொடைக்கானலில் விவசாயி ஒருவர் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் கிலோ கணக்கில் குங்குமப்பூ சாகுபடி செய்து பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். கொடைக்கானலை சேர்ந்த மூர்த்தி என்ற விவசாயி, கடந்த 2014ம் ஆண்டு முதல் குங்குமப்பூ உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கவுஞ்சி மலை கிராமத்தில் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி பசுமை குடில் அமைத்திருக்கிறார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலும் பயிற்சி பெற்று காஷ்மீரில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ விதை கிழங்குகளை வாங்கி வந்த அவர், அது முதல் குங்குமப்பூ சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். குங்குமப்பூ சாகுபடி மூலம் 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கும் விவசாயி மூர்த்தி, சுழற்சி முறையில் விளைநிலத்தில் ஆப்பிள், ஆப்ரிகாட், பாதம் உள்ளிட்டவற்றையும் சாகுபடி செய்வதாக தெரிவிக்கின்றார்.

உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி சாகுபடிக்கு பதில், குங்குமப்பூ சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாகவும், உள்ளூர் சிறப்பு சந்தையில் பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் மூர்த்தி கூறுகின்றார். விளைச்சலுக்கு கொடைக்கானல் சீதோஷ்ண நிலை சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post குங்குமப்பூ சாகுபடியில் அசத்தும் கொடைக்கானல் விவசாயி; ரூ.4 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...