×

சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக கேரள தலைமைச் செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை : சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக கேரள தலைமைச் செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முதல்வர் உத்தரவின் பேரில் கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வலியுறுத்துகிறோம். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக வழிபட திட்டங்கள் வகுப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் வரும் பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு திறமையாக கையாள்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக கேரள தலைமைச் செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Kerala ,Sabarimala ,Minister ,Shekharbabu ,Chennai ,Chief Secretary of ,Chief Minister ,Kerala Devaswam ,Board ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...