×
Saravana Stores

ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!!

சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 84,765 இடங்களுக்கு 1,74,756 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரம் பெற்றோரின் செல்போன் எண்களுக்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

The post ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது