×

ரூ.105 கோடி கல்வி முறைகேடு ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் கைது

ஜெய்ப்பூர்: அசாம் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் (எஸ்சிஇஆர்டி) நடந்த பலகோடி ரூபாய் முறைகேட்டில் தொடர்புடைய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியான செவாலி தேவி சர்மா எஸ்சிஇஆர்டி பொறுப்பு இயக்குநராக இருந்தவர். இவர் பதவியில் இருந்த போது 2017-2022 வரையிலான கால கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொலைதூர திறந்தவெளி பயிற்சி மையங்களை அமைப்பதாக கூறி ரூ.105 கோடி முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், அஜ்மீர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் ஐஏஎஸ் அதிகாரி தேவி சர்மா, அவரது மருமகன் அஜித் பால் சிங் மற்றும் ஒப்பந்ததாரர் ராகுல் அமீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் அசாம் முதல்வரின் சிறப்பு விஜிலன்ஸ் பிரிவு கவுகாத்தியில் கடந்த வாரம் 6 பேரை கைது செய்துள்ளது.

The post ரூ.105 கோடி கல்வி முறைகேடு ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Jaipur ,Assam State Council of Educational Research and Training ,SCERT ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...