×

ஆட்ட நாயகன் விருது: கோஹ்லியை முந்திய ரோகித்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, 45 பந்துகளில் 76 ரன் குவித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக 20 முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தி உள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 19 ஆட்ட நாயகன் விருதுகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒட்டு மொத்த பட்டியலில், டி வில்லியர்ஸ், 25 ஆட்ட நாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

The post ஆட்ட நாயகன் விருது: கோஹ்லியை முந்திய ரோகித் appeared first on Dinakaran.

Tags : Rohit ,Kohli ,Rohit Sharma ,Mumbai ,Chennai Super Kings ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...