×

கோடை சீசன் துவக்கம் நகராட்சியில் சாலை சீரமைக்கப்படுமா?

*வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல், பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சில சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்துவங்கிவிட்டனர். அடுத்த இரு மாதங்கள் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்து செல்லும். ஆனால், நகராட்சிக்குட்பட்ட சாலைகள் பழுதடைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களின் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ஊட்டி நகரில் ஏடிசி., முதல் மணிக்கூண்டு வரை உள்ள சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல், சவுத் வீக் முதல் பாம்பேகேசில் வரையுள்ள சாலை, சாமுண்டி செல்லும் சாலை போன்றவைகள் பழுதடைந்துள்ளன. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ., வரையில் சாலையோரத்தில் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடப்படாமல் உள்ளதால், வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வாகனங்கள் சாலைகளில் நிறுத்துவதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த பள்ளத்தை மூடி கான்கிரீட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. மேலும், அனைத்து சாலைகளிலும் மழை நீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கோடை சீசன் துவக்கம் நகராட்சியில் சாலை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!