×

ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை. சார்பில் வாலிபால் போட்டி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதன் துவக்க விழாவுக்கு டி.மகேஷ், என்.ஜோதி ஸ்வரூபன், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எம்.கே. கல்லூரி முதல்வர் கே.ஏ.முகமது ஜுனைட் தலைமை தாங்கி வாலிபால் போட்டியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த இந்த போட்டியில், டி.ஜெ.எஸ்.கல்லூரி, ஆர்.எம்.கே. கல்லூரி, வேலம்மாள் கல்லூரி, வேல்டெக் கல்லூரி, கோஜன் கல்லூரி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை. சார்பில் வாலிபால் போட்டி appeared first on Dinakaran.

Tags : Anna University ,RMK College of Engineering ,Kummidipoondi ,Kavarappet ,R.M.K. ,T.Mahesh ,N.Jyoti Swaruban ,Ramesh Kannan ,R.M.K. College of Engineering ,Dinakaran ,
× RELATED பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக...