×

ஆர்.கே.பேட்டை அருகே பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே தாமனேரி கிராமத்தில், ‘ஆல் தி சில்ரன்’ அறக்கட்டளை மற்றும் ‘ஒயிட் ஆரா’ அறக்கட்டளை இணைந்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் உறுதிப்படுத்தும் வகையில், இலவச தொழிற்பயிற்சி (எம்பிராய்டரிங்) வகுப்புகள் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் கிரி தொடங்கி வைத்தார். இதில் கிராம பெண்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்பிராயிடர் பயிற்சியாளர் சிலோர்மணி பெண்களுக்கு எம்பிராயிடர் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கி வருவாய் பெருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி செய்திருந்தார்.

The post ஆர்.கே.பேட்டை அருகே பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Pallipattu ,Thamaneri ,RK Pettai ,Thiruvallur district ,All the Children' Trust ,White Aura' Trust ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத...