×
Saravana Stores

வரகு அரிசி உப்புமா

தேவையானவை

வரகு அரிசி – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
நறுக்கிய இஞ்சி – 2 தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
தண்ணீர் – 3 கப்
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி.

செய்முறை:

வரகு அரிசியை மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொண்டு பின்னர், தண்ணீர்விட்டு அலசிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளிக்கவும். அத்துடன், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் வரகு அரிசியை சேர்த்து நன்றாக கலந்து மூடியிட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு கொத்துமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

The post வரகு அரிசி உப்புமா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!