×

அரிசி தேங்காய் பாயசம்

தேவையானவை:

பச்சரிசி – 1 கரண்டி,
தேங்காய்த் துருவல் – 1/2 கப்,
பயத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
உருண்டை வெல்லம் – 2 கரண்டி (நசுக்கியது),
பால் – 1/2 கப்,
குங்குமப் பூ – சிறிது,
பச்சைக் கற்பூரம் – 1/2 சிட்டிகை,
நெய் – 1 டீஸ்பூன்,
முந்திரி – 6,
உலர் திராட்சை – 6.

செய்முறை:

ஒரு டீஸ்பூன் இளம் சூடான பாலில் குங்குமப் பூவை ஊற வைக்கவும். முந்திரி, திராட்சையை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து வைக்கவும். தேங்காயைத் துருவி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.அரிசியையும் பயத்தம் பருப்பையும் தனித்தனி யாக வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். அரிசி வெள்ளையாக மாறியதும் அதை ஒரு தட்டில் போட்டு சற்றே ஆறியதும் ரவையாக அரைத்துக் கொள்ளவும்.பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து (அரிசி/ பருப்பு : தண்ணீர் விகிதம் = 1 : 3), குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும். குக்கர் திறக்க வந்ததும், நன்கு மசிக்கவும். வெல்லத்தைப் பொடித்து, ஒரு கரண்டி தண்ணீரில் கரைய விட்டு, வடிகட்டி, அரைத்த அரிசியில் சேர்க்கவும். தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். அடுப்பி லிருந்து இறக்கி, பால் மற்றும் வெந்த பருப்புகளை சேர்த்துக் கலக்கவும். குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். நன்கு கலக்கவும். வறுத்த முந்திரி,திராட்சையைத் தூவி அலங்கரிக்கவும்.

The post அரிசி தேங்காய் பாயசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முட்டை சேமியா