×

சில்லறை விலை பண வீக்கம் சரிவு

புதுடெல்லி: சில்லறை விலை பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறை விலை பண வீக்கம் 5.02 சதவீதமாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 7.41 சதவீதமாக இருந்தது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி: இதுபோல் தொழில்துறை உற்பத்தி புள்ளி 14 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த ஆகஸ்ட்டில் 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருட்கள் உற்பத்தி, சுரங்கம், மின் துறைகளில் உற்பத்தி அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.

The post சில்லறை விலை பண வீக்கம் சரிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Reserve Bank ,Dinakaraan ,
× RELATED காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால்...