×

குடியிருப்பு, பணி நியமன ஆணை வழங்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பல்வேறு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து 414 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், காயரம்பேடு திட்டப்பகுதியில் 20 இருளர் இன பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் சார்பில், இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். இதைத் தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் பணியின்போது மரணமடைந்த கிராம உதவியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்ஆர்எல்.இதயவர்மன், புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி, பல்லாவரம் பகுதி செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் .தேன்மொழி நரேந்திரன், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுபலட்சுமி பாபு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடியிருப்பு, பணி நியமன ஆணை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Rahul Nath ,District Collector ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...