×

தமிழகத்தில் 2021-22ம் ஆண்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் சென்டனரி பள்ளியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500 இளம் கீபோர்டு இசைக் கலைஞர்கள் இசைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இது ஆசிய புக் ஆப் ரெக்கார்டு சாதனைக்காக நிகழ்த்தப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டில் 440 குழந்தைகள் கலந்து கொண்டு சாதனையை படைத்துள்ளனர். நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி உலக சாதனைக்காக அனுப்பப்பட உள்ளது.

தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக 14417, 1098 எண்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2021-22ம் ஆண்டு 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

The post தமிழகத்தில் 2021-22ம் ஆண்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Shanthom St Beets Centenary School ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி...