×

மத வெறுப்பு பேச்சு: பாஜ அமைச்சர் மீது போலீசார் வழக்கு

,

பெங்களூரு: மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய கர்நாடக பாஜ அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருப்பவர் முனிரத்னா. இவர் மார்ச் 31ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது கிறிஸ்தவர்கள் இந்த நிமிடம் வரை மதமாற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதமாற்றம் செய்ய வருபவர்களை அடித்து உதைத்து மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறினார். இதையடுத்து அரசு அதிகாரி ஒருவர் அமைச்சர் முனிரத்னா மீது அளித்த புகாரின் அடிப்படையில் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் அமைச்சர் முனிரத்னா மீது இருவேறு மத மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், குற்றத்தை தூண்டுதல், மதரீதியாக விரோதத்தை வளர்த்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post மத வெறுப்பு பேச்சு: பாஜ அமைச்சர் மீது போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,Karnataka ,minister ,Karnataka… ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...