×

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: எடப்பாடி பேட்டி

சென்னை: திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தண்ணீர் புகுந்ததால் ரூ.800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவி வழங்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் விவசாயம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 7,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,Tiruvottiyur ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...